News March 21, 2024
போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்குழி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் காளிதாஸ் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிதாசை நேற்று(மார்ச்.20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News December 25, 2025
பழனியில் சோகம்.. பக்தர் பலி!

கரூர் மாவட்டம் அழகாபுரி சிபுதூரை சேர்ந்தவர் சுரேஷ். சென்ட்ரிங் தொழிலாளியான இவர், உறவினர்களுடன் பழனிக்கு பாதயாத்திரை வந்திருந்தார். இன்று காலை ஆயக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, சென்னையிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த ரயில் மோதி அவர் உயிரிழந்தார். பழனி ரயில்வே உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
திண்டுக்கல் மக்களே உடனே SAVE பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கான புகார் எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெட்டியார்சத்திரம் 0451- 2400195, குஜிலியம்பாறை 04551-293606, நிலக்கோட்டை 04543-294699, வடமதுரை 04551-2911823, ஆத்தூர் 0451-2911823, திண்டுக்கல் 0451-2999603, பழனி 04545-242180, கொடைக்கானல் 04542-243188 என ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, SHARE பண்ணுங்க!
News December 25, 2025
திண்டுக்கல்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியில் பிரபு (38) என்பவர், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஈஸ்வரியை (35) சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்நிலையில் கொலையாளி பிரபுவை, சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


