News March 26, 2025
போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News March 26, 2025
சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. மாசுபட்ட குடிநீர் வழியாகவும் இந்த தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்ய ஊராட்சிகளை வலியுறுத்த வேண்டும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், அதிக தண்ணீர் அருந்தி நீர்ச்சத்து இழப்பை தடுக்க வேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
News March 26, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (மார்ச்.25) நீர்மட்டம்: வைகை அணை: 58.50 (71) அடி, வரத்து: 181 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113 (142) அடி, வரத்து: 127 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 67.40 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 34 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
News March 26, 2025
தேனியில் துணை முதல்வர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை துணை முதல்வர் உதயநிதி மார்ச்.28, 29 அன்று ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வில் திட்ட பணிகளின் முன்னேற்றம், பதிவேடுகளை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கவுள்ளார். இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிலை குறித்து பட்டியல் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.