News April 4, 2025

போக்குவரத்து விதிமீறல் 1,835 வழக்குகள் பதிவு

image

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, 932 ஹெல்மட் அணியாதது,29பேர் சீட் பெல்ட் அணியாதது,100 வாகனங்கள் காப்பீடு இல்லாதது என 1,835 வழக்குகள் என ரூ.6.77 லட்சத்திற்கு அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய 29 பேர் உரிமத்தை ரத்து செய்தனர்.

Similar News

News April 10, 2025

ஈரோடு: நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

ஈரோடு, கொங்கம்பாளையம், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீடு, அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி, வரும் ஏப்.15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்.,13 வரை ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0424-2998632 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற நினைக்கும் உங்களது நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க. 

News April 10, 2025

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையாளர் கோ. ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள், மளிகை கடைகள் வணிகம் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், மேலும் இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு மற்றும் உறுதி தர வேண்டும் எனவும் கூறினார்.

News April 10, 2025

ராணுவத்தில் வேலை வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

error: Content is protected !!