News November 6, 2024
போக்குவரத்து கழகத்தில் ரூ.3.80 கோடி வருவாய்
இந்த ஆண்டு தீபாவளி 2024 திருநாளை முன்னிட்டு பேருந்துகளை இயக்கிய வகையில் 04.11.2024 அன்று மதுரை மண்டல போக்குவரத்துக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வருவாயாக ரூ.3 கோடியே 80 லட்சம் ஈட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திண்டுக்கல் மண்டலத்தில் ரூ.1 கோடியே 61 லட்சம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
முப்படை ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்று SPARSH மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர், அவர்தம் விதவைகளுக்காக SPARSH OUTREACH நிகழ்ச்சியில் SPARSH ன் ராணுவ ஓய்வூதிய குறைபாடுகள் களைய பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர்கள் மூலம் ராணுவ ஓய்வுதிய குறைதீர் கூட்டம் மதுரை மடீசியா ஹாலில் வரும் 22 ஆம் தேதி 9 மணியளவில் நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
News November 19, 2024
குழு அமைத்து விசாரணை நடத்த பரிந்துரை – ஆட்சியர்
மதுரை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களுக்கு ST சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து காட்டு நாயக்கர் பிரிவினருக்கு ST சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
News November 19, 2024
இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விபரம்.
மதுரை மாவட்ட இரவு நேர காவலர்களின் ரோந்து பணி விபரம் மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊமச்சிகுளம், சமயநல்லூர், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.