News July 10, 2025
போக்குவரத்து அபராதம் ரத்து? இதை மட்டும் செஞ்சிடாதீங்க

சேலம்: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டும்

சேலம் மாவட்டத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை 554 பயனாளிகளுக்கு ரூ.14.08 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.2.33 கோடி மானியத் தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டு கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வங்கிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தல்!
News July 10, 2025
அதிமுக பொதுச் செயலாளர் சுவாமி தரிசனம்

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம் பாளையம் பகுதியில் அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவிலில் இன்று அதிமுகவின் பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News July 10, 2025
உங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க அரிய வாய்ப்பு

சேலம் மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, ஜூலை முதல் செப்டம்பர் வரை அனைத்து நாட்களிலும், மாவட்ட சமசர மையம் மற்றும் தாலுகா சமரச மையங்களில் நேரடியாகவோ, வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை, வழக்காடிகள் அனைவரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கேட்டுக் கொண்டுள்ளார்.