News June 20, 2024
போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திய டூ வீலர்கள் பறிமுதல்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. அதனால் நேற்று புதிய பேருந்து நிலையம் உள்ளேயும் வெளியும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 32 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகமது அனிபா தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 9, 2025
பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News November 9, 2025
பெரம்பலூர்: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <


