News February 27, 2025

பொழுதுபோக்கர்களின் கூடமான நூலகங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமங்கள் தோறும் நுாலகங்கள் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட போது முறையாக செயல்பட்டு வந்த நுாலகங்கள், நாளடைவில் ஆங்காங்கு பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது நூலகங்கள் பொழுதுபோக்கர்களுக்கு ஓய்வுகூடமாக மாறி விட்டன. இதனை கருத்தில் கொண்டு நுாலகங்களை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 7, 2026

கொடைக்கானல்: அடையாளம் தெரியாத எலும்புக்கூடு

image

கொடைக்கானல் கங்கா காம்பவுண்ட் பகுதியில் ஏரிச்சாலையில் இருந்து நீர் வெளியேறும் இடத்தில் பேண்ட் அணிந்த நிலையில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. தகவலறிந்து வந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் அவற்றை கைப்பற்றி ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

நத்தம் அருகே சோகம்; பெண் பலி

image

நத்தம் அருகே கவரயபட்டியை சேர்ந்தவர் அடைக்கம்மாள் (55). இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அடைக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

அறித்தார் திண்டுக்கல் கலெக்டர்! GOOD NEWS

image

திண்டுக்கல் நத்தம் ரோடு குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 09.03.2026 அன்று தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. அரசு, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10,560 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!