News September 15, 2024
பொறியாளர்கள் தினம்: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்காலத்தை உருவாக்க புதுப்புது தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும் பொறியாளர்கள் சமுதாயத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளைப் வரவேற்பதும் அங்கீகரிப்பதும் நமது கடமையாகும். இந்நாளில் பொறியாளர்கள் அனைவருக்கும் பொறியாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.
Similar News
News September 15, 2025
புதுவை பாண்லே ஊழியரிடம் 6 சவரன் நகை பறிப்பு

புதுவை சண்முகாபுரத்தைச் சேர்ந்த பாண்லே அலுவலகத்தின் சீனியர் அசிஸ்டென்ட் விஜயலட்சுமி என்பவர் நேற்று முன்தினம் இரவு கதிர்காமத்தில் உறவினர் வீட்டில் இருந்த தனது மகள்களை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு செல்லும்போது, பின்னால் பைக்கில் வந்த நபர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து தப்பி சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News September 15, 2025
புதுவை: மத்திய அரசில் இன்ஜினியர் பணி அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 15, 2025
புதுவை: ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்து அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆசிரியர்களின் 5 மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை என மொத்தம் ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.