News March 28, 2026

பொன்ராஜ் பேசியது தவறில்லை: சீமான்

image

தவெகவை ஆதரிக்கும் மகளிர் குறித்து ஆபாசமாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது<<19485483>>விஜய் <<>>நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பொன்ராஜ் பேசியது தவறில்லை என்றும், அது ஆதங்கத்தின் வெளிப்பாடு எனவும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் பெண்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைக்க, விஜய் புகார் அளித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 1, 2026

விஜய்யை விமர்சிக்க மாட்டேன்: சுந்தர்.சி

image

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சுந்தர்.சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் விஜய்யையோ தவெக வேட்பாளர்களையோ விமர்சிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தனது மனைவி குஷ்பு, விஜய்யை ஒரு தம்பியாகவும், விஜய்யும் குஷ்புவை அக்காவாகவும் அன்போடு பார்க்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 1, 2026

BREAKING: அனைவருக்கும் மாதம் ₹5,000.. புதிய வாக்குறுதி

image

பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கப்படும் என பாமக தேர்தல் வாக்குறுதியாக அன்புமணி அறிவித்துள்ளார். மேலும், *வீட்டில் ஒருவருக்கு அரசு (அ) தனியார் வேலை உறுதி செய்யப்படும். *உடனடியாக தமிழகம் முழுவதும் 40,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். *2.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வழி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

News April 1, 2026

தங்கம் ₹3,040, வெள்ளி ₹15,000 விலை மாறியது!

image

மாதத்தின் தொடக்க நாளே <<19530368>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹15 உயர்ந்து ₹265-க்கும், கிலோ ₹15,000 உயர்ந்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. மேற்காசிய போர் பதற்றத்தால் தங்கம் விலையும் இன்று சவரனுக்கு ₹3,040 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. மேலும் வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!