News June 19, 2024
பொன்முடி மீதான வழக்கில் இன்று விசாரணை

செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணையை இன்று(ஜூன் 19) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News July 7, 2025
விழுப்புரம் இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <
News July 7, 2025
விழுப்புரத்தில் மாணவர்களுக்கு 10ஆம் தேதி பேச்சுப்போட்டி

தமிழ்நாடு நாளை நினைவு கூறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி வரும் 10 ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பினை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<