News May 5, 2024
பொன்னேரியில் யுகேஜி மாணவன் உலக சாதனை

பொன்னேரி தேவமாநகரை சேர்ந்தவர் வினோத்-அன்னலட்சுமி. இவர்களது மகன் காசிக் ராஜேந்திரா (4) தனியார் பள்ளியில் யுகேஜி படித்துவந்த நிலையில், தனது அறிவுத்திறனை பயன்படுத்தி கவிஞர்கள் எழுதிய 70 கவிதைகளின் பெயர்கள், 27 விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பெயர்கள், 50 நாடுகள் அவற்றின் நாணயங்கள் உள்ளிட்ட 213 கேள்விகளுக்கு பதில் அளித்து ட்ரம்ப் வேர்ல்ட் ரெக்கார்ட் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Similar News
News July 4, 2025
திருவள்ளூர் உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 04) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.30, உருளை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.35, அவரைக்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.
News July 4, 2025
சின்னகாவனத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னகாவனம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத் தொடக்க விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி சிறப்பித்தார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வேளாண்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News July 4, 2025
திருவள்ளூர் போலிஸ் அடுத்தால் என்ன செய்யலாம் ? 2/2

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.