News October 24, 2025
பொன்னுசாமி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பொன்னுசாமி இறுதி சடங்கு இன்று அக்டோபர் 24ந் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள் கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில் உரிய அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Similar News
News October 24, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட அதிகாரியை, வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
நாமக்கல்: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தால் வேலை!

நாமக்கல் மக்களே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC) நிறுவனம் தேசிய அளவில் உள்ள 2,623 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தொழிற்பயிற்சி வாய்ப்பை பெறலாம். மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News October 24, 2025
நாமக்கல்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <


