News December 29, 2024

பொன்னமராவதி டிஎஸ்பிக்கு பதவி உயர்வு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளராக ஜூலியஸ் சீசர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தென்காசி சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு அறிவிக்கிபட்டுள்ளது. பொன்னமராவதி டிஎஸ்பியாக பணிபுரிந்து தென்காசி ஏடிசி எஸ் பி யாக பதவி உயர்வு பெற்றுள்ள காவல் துறை கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 31, 2024

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் கைது

image

 புதுக்கோட்டைசின்ன பூங்கா எதிரே நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை புதுக்கோட்டை காவல் துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

News December 31, 2024

புதுகை மாவட்ட எஸ்.பி. ஆக அபிஷேக் குப்தா நியமனம்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா  நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக்குப்தா விரைவில் பதவியேற்க உள்ளார்.

News December 31, 2024

புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள்  13,15,17 பிரிவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் போட்டியில் பங்கு பெற புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது