News April 15, 2024
பொன்னமராவதி அருகே விபத்து: சிறுவன் பலி!

பொன்னமராவதி, நெய்வேலி
கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(28). இவர் தனது மகன் தர்ஷனுடன் (2) அரசமலையில் பால் விநியோகம் செய்து விட்டு பைக்கில் திரும்பும்போது கோபி என்பவர் ஓட்டி வந்த பைக்கும் மோதியது. இதைப்போன்று மகாலெட்சுமி என்பவரின் பைக்கும் மோதிக்கொண்டது.
இதில் படுகாயமடைந்த மூவரில் சிறுவன் தர்ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
Similar News
News April 19, 2025
புதுக்கோட்டை இளைஞரை கௌரவித்த சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் கடந்த 8ஆம் தேதி, ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு “Community Lifesaver Award” வழங்கி கௌரவித்துள்ளது.
News April 18, 2025
புதுக்கோட்டை: சனிக்கிழமை வழிப்பாட்டுக்கு உகந்த ஸ்தலம்

அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது,இங்குள்ள விஸ்வரூப அஞ்சநேயர் கிழக்கு பார்த்த முகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் துன்பங்கள் போக்கும் இந்த அழியா நிலை விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிப்பட நாளை சனிக்கிழமை உகந்த நாளாகும். இதை உங்க நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News April 18, 2025
புதுக்கோட்டை – ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.