News August 27, 2024
பொன்னமராவதியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

பொன்னமராவதி ஜெ.ஜெ நகரில் வசித்து வருபவர் அழகுமணி. இவரது மனைவி நல்லம்மாள். பலகாரக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு பூபதி (13), கார்த்திகேயன் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் 2 பேரும் நேற்று சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில் கடையின் உள்ளே சிறுவன் பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டன்
Similar News
News March 10, 2026
புதுகை: சனி, ஞாயிறு இரு நாட்களும் ரயில் இயங்கும்

திருச்சியிலிருந்து புதுகை வழியாக காரைக்குடி, விருதுநகர் சென்று திரும்பும் பயணிகள் ரயில் சனி, ஞாயிறு தவிர மற்ற நாள்களில் இயங்கி வந்தது. இந்த ரயிலை சனி, ஞாயிறு இரு நாட்களும் இயக்க வேண்டும் என புதுகை பணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இந்த ரயிலை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இதனால் புதுகை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 10, 2026
புதுக்கோட்டை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
புதுக்கோட்டை: பிரதமர் வருகை; MLA ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நேற்று விராலிமலை MLA சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாளை மார்.11ஆம் தேதி திருச்சிக்கு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, கிளை, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


