News August 15, 2024
பொது விருந்தில் கலந்து கொண்ட ஆட்சியர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தி, திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற சேலைகள் மற்றும் வேட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் இணை ஆணையர்கள் மாரியப்பன், கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News May 8, 2025
திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
திருவாரூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It
News May 7, 2025
சாலையை கடந்த புள்ளிமான் பலி

துவரங்குறிச்சி அடுத்த சொரியம்பட்டி அருகே நேற்று இரவு திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மீது சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளிமான் எதிர்பாராத விதமாக மோதியதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. துவரங்குறிச்சி வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் சாலையை கடக்கும் வனவிலங்குகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.