News August 13, 2025

பொது இடத்தில் பிறந்த நாள் விழா – வாலிபர் கைது

image

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி இவரது மகன் நவீன் குமார் என்பவர் கடந்த 10 ம் தேதி அதே பகுதியில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பிறந்த நாள் விழா முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்து தீர்த்தகிரி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து நவீன்குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 13, 2025

திருப்பத்தூரில் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற (23.08.2025) அன்று முதல் 30 வாரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி நியூ டவுன் நகராட்சி பள்ளி, ஆம்பூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0416 2256166 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

News August 13, 2025

திருப்பத்தூர்: 10th போதும் அரசு வேலை!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்

image

திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை கொண்ட மொழி அதனை மாணவர்கள் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

error: Content is protected !!