News April 7, 2026
பொதுமைக்கு விளக்கம் அளித்த சீமான்

இலவச திட்டங்கள் அறிவித்து ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றும் வேலையால் தமிழகத்துக்கு ₹10.5 லட்சம் கோடி கடன் உள்ளதாக சீமான் கூறியுள்ளார். புதுவையில் பேசிய அவர், அவரவர் வருவாய்க்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் பாகுபாடின்றி சமமாக நிதியை பிரித்து கொடுப்பதுதான் பொதுமை என்றார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்து தீர்த்த ஒரு பிரச்னையை கூறுங்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Similar News
News April 11, 2026
பேச்சுவார்த்தை நடத்த பாக்., சென்ற அமெரிக்கா குழு

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தானுக்கு சென்றடைந்தது. இரு வாரம் போர் நிறுத்தம் அமலான நிலையில், விரிவான மற்றும் நீடித்த உடன்படிக்கையை எட்ட இருதரப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டால், போர் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 11, 2026
9,195 பணியிடங்கள்.. 10th தகுதி போதும்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,195 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். சம்பளமாக ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும். 21-27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த <
News April 11, 2026
சங்கீதா திடீர் முடிவு.. விஜய் விவாகரத்தில் திருப்பம்

சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு ஏப்.20-ல் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் அவர் மீடியாவை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது விஜய்க்கு எதிரான ஆதாரங்களை அவர் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏப்.23-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சங்கீதாவின் திடீர் முடிவு விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


