News January 10, 2025
பொதுமக்கள் நடமாட்டம் வேண்டாம்: ஆட்சியர்

அணியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது. இதனால்,அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News December 9, 2025
திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்குறிப்பிட்ட தேதிகளில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 489 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மனுக்கள், நில ஆக்கிரமிப்பு தொடர்பான மணிக்குள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 489 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
திருச்சி: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

திருச்சி மக்களே உங்களுக்கு சட்ட உதவி தேவையா? இனி கவலை வேண்டாம். மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!


