News May 1, 2024
பொதுமக்கள் செல்ல தடை

ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான குவாரியில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு உடல்கள் சிதறி கிடக்கின்றன. வெடி மருந்துகள் இன்னும் முழுமையாக வெடித்து சிதறாததால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
விருதுநகர்: சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு; ஒருவர் கைது

ஆலங்குளம் செல்லும் சாலையில் உள்ள கிளியம்பட்டி பகுதியில் மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வசித்து வரும் கருப்பசாமி என்பவர் தனது கார் செட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களையும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
News March 4, 2026
விருதுநகர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

வெம்பக்கோட்டை அருகே மஞ்சலோடைப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (24). இவர் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகள் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 4, 2026
கே.டி.ஆர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.


