News April 23, 2025
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23.04.2025) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. A.சுஜாதா, பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News October 18, 2025
ஈரோடு அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

ஈரோடு, பெருந்துறையை அடுத்த வீரச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (67). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முந்தினம் பாலக்கரை அருகில் கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
ஈரோடு: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News October 18, 2025
ஈரோடு: IMPORTANT வாடகை வீட்டு வாசியா நீங்க!

ஈரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.