News March 25, 2026
பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது: ECI

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், சோதனையின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ செலவுக்கு ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு போனால் சிகிச்சை பெறுபவரின் விவரங்களை செல்போனில் காண்பித்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
BREAKING: திண்டிவனம் – விசிக வேட்பாளராக வன்னியசு அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த வகையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன்படி, திண்டிவனம் தனித்தொகுதியில், விசிகவின் பொதுச்செயலாளர் வன்னியரசு, பானை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். இந்த தொகுதியில் இவரின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?
News March 29, 2026
காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் போட்டி

திமுக கூட்டணியில் 8 இடங்களை பெற்ற விசிகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. கட்சியின் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். அதேபோல், சிந்தனைச் செல்வன் (செய்யூர்) வன்னியரசு (திண்டிவனம்), எழில் கரோலின் (அரக்கோணம்) , பன்னீர்தாஸ் (திருப்போரூர்),
அப்துல் ரகுமான் (பண்ருட்டி), மாலதி (கள்ளக்குறிச்சி), சக்திவேல் (பெரியகுளம்) ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
News March 29, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. SHARE IT


