News August 18, 2025
பொதுமக்களிடம் இருந்து 510 புகார் மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 18, 2025
தஞ்சையில் அடையாள தெரியாத ஆண் சடலம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இராஜாமடம் கிளைவாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 18, 2025
தஞ்சை: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 18, 2025
தஞ்சை மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள்?

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய அதிகாரிகளாக பா. பிரியங்கா பங்கஜம் – மாவட்ட ஆட்சியர், ஜியாவுல் ஹக் – காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் உள்ளனர். மேலும் தெ. தியாகராஜன் – மாவட்ட வருவாய் அலுவலர், முனைவர் மு.பாலகணேஷ் – திட்ட இயக்குநர், இரா. இராஜாராம்-காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பணியில் உள்ளனர். தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து நம் மாவட்ட தகவலை தெரியப்படுத்துங்கள்