News February 28, 2026
பொதுத்தேர்வு மாணவர்களே, இது உங்களுக்குத்தான்!

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில், மாணவர்கள் சந்தேகங்களை கேட்கவும், புகார் தெரிவிக்கவும் தேர்வுத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு மாணவர்களும், பொதுமக்களும் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களை களைந்து பதற்றமின்றி தேர்வு எழுதுங்கள் மாணவர்களே, ALL THE BEST..!
Similar News
News March 1, 2026
ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாயா?

சுமார் 2,100 KM-க்கு அப்பால் நடக்கும் இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் இந்தியர்களின் பாக்கெட்டை பதம்பார்க்க உள்ளது. இப்போரினால், இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை கொண்டுவரும் மிக முக்கியமான கடல் வழியான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி நடந்தால் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $130 டாலர் வரை உயரும். இதனால் இந்தியாவில் ₹200 வரை பெட்ரோல் விலை உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
News March 1, 2026
போர் பதற்றம்… பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வேண்டுகோள்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து தரப்பும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் போர் சூழலில் சிக்கியுள்ள இந்தியர்கள் தூதரகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News March 1, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்

தாயுமானவர் திட்டத்தின் கீழ், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாற்றுத் திறனாளிகள், முதியவர்களின் இல்லங்களுக்கு மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. அந்த தேதிகளில் தவற விடாமல் பொருள்களை பெற்றுக் கொள்ள மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. SHARE IT


