News January 15, 2026
பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான அறுவடை திருநாளை பொங்கல் வைத்து வரவேற்க சிறப்பு நேரங்கள் உள்ளன. அதன்படி, சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம் அதிகாலை 4:30 மணி முதல் காலை 6 மணி வரையாகும். இந்த நேரத்தில் வைக்க முடியாதவர்கள் காலை 7:45 முதல் 8:45 வரை அல்லது 10:35 முதல் 11:30-க்குள் வைக்கலாம். அனைவரது இல்லங்களிலும் அன்பு, இன்பம் பொங்க Way2News சார்பாக வாழ்த்துகிறோம். #பொங்கலோ பொங்கல்.
Similar News
News January 27, 2026
கள்ளக்குறிச்சி: காதலன் கண்முன்னே துடிதுடித்த பலி!

கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி ராஜசேகரின் மகள் அனீஷா (25). இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் தங்கி சட்டம் படித்து வந்தார். இவர் தனது காதலன் நித்தியானந்தத்திடம் வீடியோ காலில் பேசியவாறே, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், அனீஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
ஒரு சவரன் தங்கம் விலை ₹1.50 லட்சத்தை தொடும்!

உலகில் இன்னும் 64,000 மெட்ரிக் டன் தங்கம் மட்டுமே வெட்டி எடுக்கப்பட வேண்டியுள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் தங்கம் அரிதாகும் என்ற எண்ணம் உருவாகி விலை மேலும் மேலும் உயர்கிறது. இந்தாண்டு துவங்கி இதுவரை 17% விலை அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டுக்குள் ஒரு கிராம் தங்கம் ₹18,500 – ₹19,000 வரையும், ஒரு சவரன் தங்கம் ₹1.50 லட்சம் வரையும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
News January 27, 2026
திமுக – காங்., கூட்டணியில் சண்டை வெடித்தது

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவான காங்., பிரமுகர்களின் கருத்துகளால் ஏற்கெனவே திமுக கூட்டணியில் புகைச்சல் உண்டானது. இந்நிலையில், MP-க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோருக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று திமுக MLA <<18969847>>தளபதி<<>> தாக்கி பேசியிருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை உள்பட பல காங்., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் திமுக – காங்., கூட்டணியில் வெளிப்படையாகவே சண்டை வெடித்துள்ளது.


