News December 13, 2025
பொங்கல் பரிசு ₹3,000.. வெளியான முக்கிய தகவல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நிதி ஆதாரங்களை திரட்ட அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாம். குறிப்பாக, அதிக லாபத்தில் இயங்கும் துறைகளிடம் கூடுதல் நிதி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிச., கடைசி வாரத்தில் பொங்கல் பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 18, 2025
இந்த மோசடியில் மாட்டிக்காதீங்க.. SBI எச்சரிக்கை!

பரவி வரும் மோசடி மெசேஜ்கள் குறித்து SBI எச்சரித்துள்ளது. YONO SBI-ல் Reward பாயிண்ட்ஸ் தருவதாக Whatsapp உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் போலியான மெசேஜ்கள் வருகிறதாம். அதை கிளிக் செய்தவுடன் உங்களின் தகவல்களை மோசடிக்காரர்கள் திருடிவிடுகிறார். இதுபோன்ற மெசேஜ்களை நம்பவேண்டாம் எனவும் இந்த மெசேஜ்கள் வந்தால், சைபர் கிரைம் 1930 அல்லது <
News December 18, 2025
பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை

பால் கொள்முதல் மற்றும் விற்பனையை சீர்படுத்தவும், பால் கலப்படத்தை தடுக்கவும் புதிய கொள்கை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்த கொள்கை மூலம் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது, உற்பத்தியாளர்களே நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 18, 2025
BREAKING: அண்ணாமலை கைது

திருப்பூரில் நடைபெற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.


