News January 4, 2026

பொங்கல் பரிசு.. மகிழ்ச்சியான செய்தி

image

பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 வழங்குவதற்கான அறிவிப்பை இன்று CM ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது. இதற்காக ₹248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று ரேஷன் கடைகளுக்கு சென்றடையும். நாளை முதல் விநியோகம் செய்யப்படும்.

Similar News

News January 21, 2026

தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

image

சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியுள்ளார். மேலும் TN போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அரசு விரும்பவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். அரசு நிர்வாகத்தின் முதுகெழும்பாக உள்ள ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News January 21, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 21, 2026

இஷான் IN, ஸ்ரேயஸ் OUT: சூர்யகுமார் யாதவ்

image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20-ல் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடமாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். காயத்தால் திலக் வர்மா விலகிய நிலையில், No.3 ஸ்பாட்டில் களமிறங்க போவது யார் என கேட்கப்பட்டது. இதற்கு, WC அணியில் இடம்பெற்றுள்ளதால் NO.3 ஸ்பாட்டில் இஷான் கிஷானுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் அதற்கு தகுதியானவர் எனவும் சூர்யகுமார் குறிப்பிட்டார். இதைப்பற்றி உங்க கருத்து?

error: Content is protected !!