News January 3, 2026
பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

பொங்கல் பரிசுத்தொகைக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுவாக பொங்கல் பரிசு பணம் ரேஷன் கடைகளில் தான் வழங்கப்படும். ஆனால் இம்முறை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பணத்தை கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்நடைமுறையை மேற்கொள்ளலாமா என பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.
Similar News
News January 29, 2026
அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

OPS-ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என கூறிய EPS, OPS-ன் ஆதரவாளர்களை அதிமுகவில் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ஜீவா செல்வம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் EPS முன்னிலையில், இன்று அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளனர்.
News January 29, 2026
விஜய் கொடுக்கும் Boost தேவையில்லை: காங்.,

திமுக- காங்., கட்சியினருக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், ‘ஆட்சியில் பங்கு’ என விஜய் கூறுவதை பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸுக்கு மீண்டும் பவர் கிடைக்கும் என விஜய்யின் தந்தை <<18982071>>SAC <<>>கூறியிருந்தார். இந்நிலையில், எங்களுக்கு யாரும் Boost தரத் தேவையில்லை. ஏற்கெனவே, எங்கள் தலைவர் ராகுல் Boost, Horlicks கொடுத்திருக்கிறார் எனக்கூறிய செல்வபெருந்தகை, SAC-யின் கூட்டணி அழைப்பை நிராகரித்துள்ளார்.
News January 29, 2026
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 13-ம் தேதி சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் உள்பட 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த திரைப்படங்களாக மாநகரம்-2016, அறம்-2017, பரியேறும் பெருமாள்-2018, அசுரன்-2019, கூழாங்கல்-2020, ஜெய்பீம் – 2021, கார்கி-2022 ஆகியவை தேர்வாகியுள்ளன.


