News January 9, 2026

பொங்கல் பரிசு பணம்.. புத்தம் புதிய அதிரடி அறிவிப்பு

image

₹3,000 ரொக்கத்தை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நேற்று முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிலருக்கு டோக்கன் கிடைக்காததால் பொங்கல் பரிசு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அப்படியான ரேஷன் அட்டைதாரர்கள், உடனடியாகவோ (அ) ஜன.13-க்கு முன்போ ரேஷன் கடைகளுக்குச் சென்று முறையிட்டு பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். நீங்க பொங்கல் பரிசு வாங்கிட்டீங்களா?

Similar News

News January 29, 2026

‘கருத்துப் பெட்டி’ மக்களை நாடும் தவெக

image

தவெக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், இக்குழுவானது TN முழுவதும் பிப்.1 முதல் பிப்.11 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில், கருத்துப் பெட்டி வைத்து பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்படும் என்றும், அதன் அடிப்படையில் TN-ஐ வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News January 29, 2026

தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது

image

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கும் ECI அழைப்பு விடுத்துள்ளது.

News January 29, 2026

கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்

image

தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ முடிவெடுக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதிமுகவை காக்கவும், பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவும் தான் தற்போது வரை போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுகவில் மீண்டும் சேர நான் ரெடி என்ற அவர், அண்ணன் எடப்பாடி ரெடியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!