News January 3, 2025
பொங்கல் பரிசு தொகுப்பு: நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

2025-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு தமிழக அரசால் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருப்பின் இதில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-11ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.70 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
News November 11, 2025
எம்.பி ராஜேஷ்குமார் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த விபரம்

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாளை (12-11-2025) பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள்; காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை வெண்ணந்தூர் பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அலுவலக கட்டிட திறப்பு விழா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், புதிய நிழற்கூடம் அமைத்தல், பட்டா வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


