News January 2, 2026
பொங்கல் பரிசு.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை & 1 முழு கரும்பை உள்ளடக்கிய பரிசுத் தொகுப்பை வழங்க ₹248 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இதில் ரொக்கப் பரிசு தொடர்பான தகவல்கள் இடம்பெறாததால், பரிசுத் தொகை கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பரிசுத் தொகை அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என கூறப்படுகிறது.
Similar News
News January 5, 2026
BREAKING: கிருஷ்ணகிரி- மூதாட்டி மீது தாக்குதல் மூவர் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே நிலத் தகராறில் உண்ணாமலை (70) என்ற மூதாட்டியை தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அவரது உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாகம் பிரிக்கப்படாத நிலத்தில் உழவுப் பணிகளைத் தடுத்த மூதாட்டியை குமார், கல்பனா மற்றும் பிரபாகரன் ஆகியோர் தாக்கிய நிலையில், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவேரிப்பட்டணம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
News January 5, 2026
திமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைகிறார்

அதிமுக தலைவர்களை தொடர்ந்து திமுக நிர்வாகிகளும் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைகின்றனர். பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி, தஞ்சை மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சி.சுந்தரபாண்டியன், ஒட்டன்சத்திரம் ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், புதுச்சேரி முன்னாள் ஐஜி ராமச்சந்திரன், புதுச்சேரி அதிமுக முன்னாள் MLA பெரியசாமி உள்ளிட்டோர் சற்றுநேரத்தில் தவெகவில் இணைகின்றனர்.
News January 5, 2026
விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு

யார் கூட்டணிக்கு வந்தால் என்ன? வரலன்னா என்ன? நம்ம அடுத்த வேலைய பார்ப்போம் என அடுத்த கட்ட கட்சி வேலைகளில் விஜய் கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. அதாவது, தொகுதி நிலவரம், மக்கள் செல்வாக்கு, சாதிய பின்னணி என அனைத்தையும் அலசி ஆராய்ந்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அவர் தயார் செய்து வைத்திருக்கிறாராம். கட்சிக்கு அப்பாற்பட்ட பலரின் பெயர்களும் பட்டியலில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


