News January 8, 2026
பொங்கல் பரிசு: அமைச்சர் காந்தி புதிய அறிவிப்பு!

TN முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, ஒரு முழுக் கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் 15 வகையான டிசைன்களில் சேலை, 4 நிறங்களில் (பார்டர்) வேட்டி வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது விருப்பமான வண்ணங்களில் கேட்டு பெறலாம் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
நாடு முழுவதும் ATM-களில் ₹10, ₹20, ₹50 ரூபாய் நோட்டுகள்

₹10, ₹20, ₹50 நோட்டுகளை வழங்கும் புதிய ATM-ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ₹500 மற்றும் ₹100 நோட்டுகளுடன் மற்ற ரூபாய் நோட்டுகளையும் வழங்கும் ATM-கள் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ATM-ல் சில்லறை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதாவது ₹500 நோட்டை செலுத்தி ஐந்து ₹100 நோட்டுகளை பெறலாம்.
News January 27, 2026
நாளை JEE தேர்வு.. இதை மறக்காதீங்க

பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் முதற்கட்ட தேர்வு நாளை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் செஷன் காலை 9 முதல் 12 மணி, இரண்டாவது செஷன் மதியம் 3 முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது. இதில் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை, பள்ளி ஐடி கார்டு ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.
News January 27, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.


