News January 6, 2026

பொங்கல் பரிசுத் தொகை ₹5,000 வழங்க வேண்டும்: EPS

image

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள EPS, எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக ₹5,000 கொடுக்க சொன்ன ஸ்டாலின், தற்போது ₹3,000 மட்டும் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மக்களுக்கு ₹5,000 வழங்க திமுக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News February 8, 2026

EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி!

image

டாடா மோட்டார்ஸ் தனது EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக TATA Curvv மாடலுக்கு, வேரியண்ட்களை பொறுத்து ₹3.80 லட்சம் – ₹3.30 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் Harrier (₹1.5 லட்சம்), Punch (₹1.6 லட்சம்), Tiago (₹1.5 லட்சம்), மற்றும் Nexon (₹1.2 லட்சம்) ஆகிய மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2026

CM ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

image

அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளை கூட செய்ய முடியாத கையாலாகாத நிலையில் திமுக அரசு உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். <<19082017>>TNPSC Group 2<<>> ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு அரசு பணி வழங்கும் திமுக அமைச்சர்களால் இம்முறைகேடு நடத்தப்பட்டதா என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்த தவறுக்காக CM, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News February 8, 2026

பிரபலமடையும் 6-7 டேட்டிங்.. உங்களுக்கு தெரியுமா?

image

சினிமாக்கள் பொதுவாக அதிக ரொமான்ட்டிக்கான, மிக அழகான ‘10/10’ Perfect Partner-களையே காட்டுகின்றனர். ஆனால் அந்த மாயபிம்பம் தங்களுக்கு வேண்டாம் என Gen Z முடிவெடுத்து விட்டார்களாம். தோற்றம், அந்தஸ்து போன்றவற்றை தாண்டி, மன அமைதியையும், புரிதலையுமே அவர்கள் அதிகம் தேடுகிறார்களாம். அப்படி அமையும் பார்ட்னர் 6-7 மதிப்பெண் பெற்றவராக இருந்தாலும் ஓகே என்பதற்கே ‘6-7 டேட்டிங்’ என பெயர் வைத்துள்ளனர்.

error: Content is protected !!