News December 27, 2025

பொங்கல் பரிசுத் தொகை.. காலையிலேயே ஸ்வீட் நியூஸ்

image

பொங்கல் பண்டிகைக்கு 20 நாள்களே உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை அடங்கிய பரிசுத் தொகுப்பு ஜனவரி 2-வது வாரத்திற்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ₹3,000 பரிசுத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் ஓரிரு நாள்களில் அரசு அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News January 27, 2026

உங்க உப்புல அயோடின் இருக்கா?

image

உடலில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு, மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு அயோடின் மிக அவசியமாகும். இது நீங்கள் சாப்பிடும் உப்பில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழி உள்ளது. உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் உப்பை தூவி ஒரு நிமிடம் காத்திருக்கவும். அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை பிழியுங்கள். நீல நிறத்தில் உருளைக்கிழங்கு மாறினால் உப்பில் அயோடின் இருக்கிறது என அர்த்தம்.

News January 27, 2026

ஆப்கானில் புதிய சட்டம்.. வலுக்கும் எதிர்ப்பு

image

ஆப்கானில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் சர்ச்சையாக மாறியுள்ளது. இது மக்களை 4 வகுப்புகளாக பிரிப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த சட்டங்களின் படி, அறிஞர்கள் (முல்லாக்கள்), உயரடுக்கு (ஆட்சியாளர்கள்), நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம் என உள்ளது. முல்லாக்கள் தவறு செய்தாலும் தண்டனை இல்லை. ஆனால், இதர வகுப்பினருக்கு தண்டனை என்பதால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

News January 27, 2026

ஜன நாயகன் ரிலீஸ்.. வெளியானது முக்கிய தகவல்

image

‘ஜன நாயகன்’ வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவை சென்னை HC ரத்து செய்துள்ளது. இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி வழக்கறிஞர் பராசரனுடன் படக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. SC-ல் மேல்முறையீடு; தனி நீதிபதியிடம் மீண்டும் மனு தாக்கல் செய்வது அல்லது தணிக்கை வாரியத்திடம் மறு தணிக்கைக்கு செல்லலாமா என ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து படக்குழு விரைவில் முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!