News December 26, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி

பொங்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பரிசுத்தொகுப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்புடன் ₹3,000 பரிசுத் தொகையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மகளிர் உரிமைத்தொகை ₹1,000, பொங்கலுக்கு முன்னதாகவே கிரெடிட் செய்யப்படுமாம். இதனால் அரசு பொங்கல் பரிசாக ₹4,000 வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 28, 2025
தமிழ் சினிமாவின் கேப்டனுக்கு நினைவு நாள் (PHOTOS)

நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 2-வது நினைவுதினம் இன்று. திரையில் ஆக்ஷன் நாயகனாக திகழ்ந்தாலும், வாழ்வில் மனிதநேயத்தின் உச்சமாக வாழ்ந்தார். மக்கள் அவரது நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இருந்தாலும், மறைந்தாலும் விஜயகாந்த் மக்களின் நெஞ்சங்களின் ‘கேப்டன்’ தான். அவரின் வாழ்க்கை வரலாற்றை Gallery-யாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக SWIPE செய்து பார்க்கவும்.
News December 28, 2025
தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் எரிகிறது: நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் CM ஸ்டாலின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தீபத்தூண் தடை மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர், தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் அப்பகுதிப் பெண்கள் மிக உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரம் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.
News December 28, 2025
வெறும் வயிற்றில் தினமும் இதை குடிக்கலாமா?

கற்றாழை சாறு ஒரு ‘நேச்சுரல் டீடாக்ஸ்’ பானம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், *ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் *மலச்சிக்கல், அசிடிட்டி, வயிறு உப்பசத்திற்கு தீர்வாகும் *எடையை குறைக்க உதவும் *சருமத்தை பொலிவாக்கும் *உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. எனினும், ஒருநாளைக்கு 30-50 மி.லி. மட்டுமே பருக வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். கர்ப்பிணிகள் டாக்டர்கள் ஆலோசனையின் படியே அருந்த வேண்டும்.


