News October 31, 2025

பொங்கல் பரிசாக ₹5,000?… அமைச்சர் குட் நியூஸ்

image

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணியிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, CM ஸ்டாலின் இதுகுறித்து அறிவிக்க இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Similar News

News November 1, 2025

Cinema Roundup: தயாரிப்பாளராக மாறிய நடிகர்

image

*புதிய தயாரிப்பு நிறுவனத்தை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் தொடங்கியுள்ளார். *’மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்டை இன்று வெளியாகிறது. *சல்மான் கானின் அடுத்த படத்தை வாரிசு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளார். *’கிஸ்’ படம் நவ.7-ம் தேதி ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

News November 1, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News November 1, 2025

PM-ன் பேச்சை பொருட்படுத்த கூடாது: எஸ்.வி.சேகர்

image

TN-ல் பிஹார் தொழிலாளர்களை துன்புறுத்துவதாக PM பேசியதற்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் சிறந்த மாநிலமாக இருந்தால் அங்கிருப்பவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றும் தமிழர்களுக்கு அங்கு வேலை கொடுக்கலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் BJP வெற்றி பெறும் எண்ணத்தில், அங்குள்ளவர்களை உசுப்பேற்றும் விதமாக PM மோடி பேசுவதை, பொருட்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!