News January 10, 2025

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூரில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு 60 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு 15 பஸ்கள், ஒசூரில் இருந்து கோயம்பேட்டுக்கு 15 பஸ்கள், வேலூரில் இருந்து பெங்களூருக்கு 8 பஸ்கள், வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 பஸ்கள் என 103 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 31, 2026

வேலூரில் வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

image

வேலூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 31, 2026

வேலூர்: தரதரவென இழுத்து செல்லப்பட்ட 8 பேர்!

image

ஒடுகத்தூர் பாக்கம்பாளையம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று (ஜன.30) நடைப்பெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளின் கயிற்றில் எதிர்பாராத விதமாக 5 பேர் சிக்கி கொண்டனர். இவர்களை காளைகள் இழுத்து சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

News January 31, 2026

வேலூர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

image

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி துணைத்தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறைகளை சேர்ந்த 128 மாணவர்கள் கலந்து கொண்டனர். 92 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

error: Content is protected !!