News January 13, 2026
பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 31, 2026
தாமதமாகும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. SORRY கேட்ட விஜய்

‘ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து முதல்முறையாக விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாகவும், இதற்காக உண்மையாகவே வருத்தம் (SORRY) தெரிவித்து கொள்வதாகவும் விஜய் கூறியுள்ளார். ஜன நாயகன் தனது கடைசி படம் என்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.
News January 31, 2026
விண்வெளியில் AI டேட்டா செண்டர்: SpaceX

விண்வெளியை உலகின் மிகப்பெரிய AI டேட்டா செண்டராக மாற்ற SpaceX தயாராகி வருகிறது. சுமார் ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தி, சூரிய சக்தி & லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த அமைப்பு, AI & டேட்டா செயலாக்கத்திற்கு தேவையான ஆற்றலை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைந்து அதிவேக டேட்டா பரிமாற்றத்தை சாத்தியமாக்கும்.
News January 31, 2026
வெள்ளி விலை ஒரே நாளில் ₹85,000 குறைந்தது

<<19009659>>தங்கம் <<>>விலையை போல், வெள்ளி விலையும் பெரியளவில் குறைந்து வருகிறது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ₹55, கிலோவுக்கு ₹55,000 குறைந்தது. இதனால், மாலையில் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை எதிரொலியால் தற்போது கிராமுக்கு மேலும் ₹30 குறைந்துள்ளது. இன்று மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹85,000 குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


