News December 24, 2025
பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு களைகட்டும். வரும் 2026-ல் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News December 25, 2025
டிரம்ப் வாழ்த்து சொன்னாலும் சர்ச்சை தான் போல!

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல சொன்னால், அதிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் டிரம்ப். SM-ல், ‘நாட்டை அழிக்க துடிக்கும் தீவிர இடதுசாரி கும்பல்கள் உள்பட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்’ என அவர் பதிவிட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குழந்தைகளுடன் ஜாலியாக உரையாடிய அவர், சாண்டாவை கண்காணிப்பதாகவும், ஒருபோதும் Bad Santa-வை நாட்டுக்குள் ஊடுருவ விடமாட்டோம் எனவும் கிண்டலாக குறிப்பிட்டார்.
News December 25, 2025
தேங்காய் எண்ணெய் விலை கடும் சரிவு!

வடமாநிலங்களில் நிலவும் உறைபனியால் கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் இருந்து தேங்காய் எண்ணெய் அனுப்புவது கடும் பாதிப்பை கண்டுள்ளது. இதனால், கடந்த மாதம் ₹5,500 வரை விற்கப்பட்ட 15 லிட்டர் டின் ₹2,000 குறைந்து ₹3,500-க்கு விற்பனையாகிறது. தேங்காய் பவுடர் 1 கிலோ ₹270-ல் இருந்து ₹240 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹100 வரை குறைந்துள்ளது.
News December 25, 2025
இங்கிலாந்து கோச்சாக ஆகிறாரா ரவி சாஸ்திரி?

ENG அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என Ex வீரர் மாண்டி பனேசர் வலியுறுத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ் என தொடர் தோல்விகளால் தடுமாறும் இங்கிலாந்து, Bazball பாணியை கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா இருமுறை ஆஸி.,யில் டெஸ்ட் தொடர் வென்றதை சுட்டிக்காட்டி, அவருக்கு AUS அணியை வீழ்த்தும் தந்திரம் தெரியும் எனவும் பனேசர் கூறியுள்ளார்.


