News December 17, 2025

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு அறிவிப்பு

image

2026, பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு களைகட்டவுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News December 18, 2025

குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

image

குழந்தைகள் பலரும் இளம் வயதிலேயே <<18600023>>போனுக்கு <<>>அடிமையாகி வருகின்றனர். இப்பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க ✦பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன் உபயோகத்தை குறையுங்க. பெற்றோர் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ✦குழந்தைகளை வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் ✦ஏதாவது கலைத் திறனில் அவர்களை ஈடுபடுத்துங்க.

News December 18, 2025

BREAKING: தவெகவில் இணைகிறார்கள்.. விஜய்

image

செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் பலர் தவெகவில் இணைய உள்ளனர் என்று விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார். மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தவெகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், அதனை விஜய்யும் தற்போது உறுதி செய்துள்ளார்.

News December 18, 2025

டெல்லியை குளிர்விக்க EPS ஒத்து ஊதுகிறார்: CM

image

MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை கைவிடக் கோரி, ‘பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்’ EPS அழுத்தம் கொடுத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களை காக்க குரல் கொடுக்க சொன்னால், டெல்லியை குளிர்விக்க EPS அறிக்கை விட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். 125 வேலைநாள்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப்போகிறது என அனைவரும் சுட்டிக்காட்டியும் அதை அறியாத அப்பாவியா அவர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!