News January 9, 2026
பொங்கல் பண்டிகை.. ஒரு கிலோ ₹12,000

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மல்லிப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லி ₹12,000-க்கு இன்று விற்பனையாகிறது. கடும் பனி, வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 1 கிராம் தங்கத்தின் விலை ₹12,000-க்கு விற்கப்படும் நிலையில், அதனை மல்லிப்பூவும் எட்டியுள்ளது. இந்த விலையேற்றத்தால் பூ விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News January 31, 2026
ராஜமெளலியின் ’வாரணாசி’ ரிலீஸ் தேதி இதுதான்!

மகேஷ் பாபு நடிக்கும் தனது ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘வாரணாசி’யின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, RRR ஆகிய பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து பெரும் ₹1,200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ராஜமெளலியின் வாரணாசி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 31, 2026
விவேகானந்தர் பொன்மொழிகள்

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். *நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
News January 31, 2026
அமெரிக்காவுடன் பேசத் தயார்: ஈரான்

டிரம்ப் நிர்வாகம் தனது அச்சுறுத்தல்களை நிறுத்தினால், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அரக்சி அறிவித்துள்ளார். மேலும் போருக்கு எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறதோ, அதே அளவுக்கு பேச்சுவார்த்தைக்கும் ஈரான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். எனினும் தங்களது ஏவுகணைத் திட்டம் குறித்து எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


