News January 4, 2025
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 4, 5,10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து குமரிக்கு 13ஆம் தேதியும், ராமநாதபுரத்திற்கு 11,13,18 ஆகிய தேதிகளிலும், நெல்லைக்கு 13,20,27 ஆகிய தேதிகளிலும், நாகர்கோவிலுக்கு 12,19 ஆகிய தேதிகளிலும் புறப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 4, 2025
செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 04) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 4, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 04) இரவு ரோந்து பணிக்கு DSP தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 4, 2025
செங்கல்பட்டில் தீய சக்திகளில் இருந்து காக்கும் சேப்பாட்டி அம்மன்

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் அமைந்துள்ளது சேப்பாட்டி அம்மன் கோயில். இந்தக் கோயில் சுற்றுவட்டார கிராம மக்களுக்குக் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நோய்களிலிருந்தும், தீய சக்திகளிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள பக்தர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். நிகழும் ஆடி மாதத்தில் ஒரு முறை சென்று வாருங்கள். ஷேர்!