News January 14, 2026
பொங்கல் பணம்.. இன்றே கடைசி நாள்

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேஷ்டி, சேலை, ₹3,000 ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் பொங்கல் விடுமுறை தொடங்கவுள்ளதால், இன்றே பொங்கல் பரிசை பெற கடைசி நாளாகும். எனவே, பொங்கல் பரிசு வாங்காதவர்கள் உடனே ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பொங்கலுக்கு பிறகும் தொகுப்பு வழங்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Similar News
News February 3, 2026
திமுகவுடனே கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவித்தார்

ஓரிரு நாள்களில் திமுக – காங்., இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார். தாங்கள் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகளின் பட்டியலையும் காங்கிரஸ் தயாரித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தவெக உடன் காங்., கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில், திமுகவுடனே கூட்டணி என கிரிஷ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
உடல் உறுப்புகளுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு விருப்பமான பழக்கம் உண்டு. அதில் சில முக்கியமான உறுப்புகள், அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க, என்ன செயல்கள் உதவியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தகவலை கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.
News February 3, 2026
சம்பளம் ₹2,000 உயர்கிறது.. இனிப்பான செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026-ம் ஆண்டின் தொடக்கமே இனிப்பான செய்தியுடன் தொடங்கியுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 58% இருந்து 63% ஆக உயரவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ₹40,000 என்று வைத்துக்கொண்டால், பழைய DA படி (58%) ₹23,200 இருக்கும் சம்பளம், புதிய DA (63%) படி ₹25,200 ஆக உயரும். இதன்மூலம் ₹2,000 வரை சம்பளம் அதிகமாக கிடைக்கும்.


