News January 13, 2026
பொங்கல் நாளில் ஜன நாயகன் வழக்கு விசாரணை

சென்சார் விவகாரத்தால் ‘ஜன நாயகன்’ ரிலீஸில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே, சென்னை HC ஆணைக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு பொங்கல் பண்டிகை நாளான ஜன.15-ல் விசாரணைக்கு வருகிறது. அத்துடன், பொங்கலுக்கு பிறகு கரூர் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்க்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 21, 2026
ராகுல் காந்தியை சந்திக்கிறாரா கனிமொழி?

திமுக – காங்கிரஸ் கூட்டணி மதில் மேல் பூனை போல தடுமாறி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டிஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் KC வேணுகோபாலை டெல்லியில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அதிக தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்குவது குறித்து KC வேணுகோபால் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 21, 2026
இனி எல்லாமே T20 மயம் தான்!

ODI கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்து விட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு இந்தியா மயமாகவுள்ளது. இன்று முதல் NZ-க்கு எதிரான T20I தொடர் நடைபெறுகிறது. இத்தொடர் முடிந்தவுடன் நடப்பு சாம்பியன் இந்தியா மீண்டும் கோப்பையை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பிப். 7-ம் தேதி T20I WC தொடங்கவுள்ளது. அத்தொடர் முடியும் அதே வேகத்தில், மார்ச் 26-ம் தேதி IPL தொடர் ஆரம்பிக்கிறது.
News January 21, 2026
மோடி, கோலி இல்ல.. இவர்தான் நாட்டின் டாப் செலிபிரிட்டி!

ஜனவரி 1-15 காலகட்டத்தில் நாட்டின் பிரபலமான நபர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. சோஷியல் மீடியா டிரெண்ட், மக்கள்- மீடியாவின் கவனத்தில் தொடர்ந்து நீடிப்பது போன்ற தரவுகளின் கீழ் இந்த லிஸ்ட் தயாராகியுள்ளது. இந்த பட்டியலில் PM மோடி, விராட் கோலி ஆகியோரை முந்தி நடிகர் ஒருவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் என அறிய மேலே உள்ள படத்தை இடதுபக்கமாக Swipe பண்ணுங்க.


