News January 15, 2026

பொங்கல் நாளிலும் கைது நடவடிக்கையா? அன்புமணி

image

உரிமைக்காக போராடிய <<18857511>>பகுதிநேர ஆசிரியர்களை<<>> பொங்கல் நாளிலும் போலீசார் கைது செய்து, தனி இடத்தில் அடைத்துள்ளதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது எனக்கூறிய அவர், உடனே ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கவும், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறவும் வலியுறுத்தினார்.

Similar News

News January 22, 2026

Sports 360°: அபிஷேக் சர்மா புதிய சாதனை

image

சர்வதேச டி20-ல் குறைவான பந்துகளில் 5,000 ரன்கள் (2,898 பந்துகள்) அடித்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். Ex இங்கிலாந்து வீரர் நார்மன் கிஃபோர்ட்(85) உடல்நலக்குறைவால் காலமானார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான 2-வது டி20-ல் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி.

News January 22, 2026

Cinema 360°: ₹31.58 கோடி வசூலித்த ‘சிறை’

image

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ உலகளவில் ₹31.58 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மிருணாள் தாகூர் நடிக்கும் ‘DACOIT’ ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. போடி கே.ராஜ்குமார் இயக்கும் ‘சியான் 63’ படத்தின் கதை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்.

News January 22, 2026

தம்பதியரே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க…

image

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும்.

error: Content is protected !!