News January 8, 2025
பொங்கல்: திருச்செந்தூரில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு

ஜனவரி 14 அன்று பொங்கலை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இதை தொடர்ந்து பொங்கல் அன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறவுள்ளன.
Similar News
News January 30, 2026
கோவில்பட்டியில் நில அதிர்வு – மக்கள் அச்சம்

கோவில்பட்டி, தென்காசி மாவடம் திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் தீடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் நின்றனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News January 30, 2026
சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.31 சனிக்கிழமை இரவு 11:50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.