News January 3, 2026
பொங்கல் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. *போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்க மருந்துகள், எரிச்சலூட்டும் மருந்துகள் கொடுக்கக் கூடாது. *காயமடைந்தவர்களுக்கு முறையாக முதலுதவி அளிக்கப்பட வேண்டும். *போட்டி நடைபெறும் இடத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். SHARE IT.
Similar News
News January 29, 2026
OPS இதற்குதான் ஏங்குகிறார்: KC பழனிசாமி

OPS-க்கு திமுகவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது தெரியவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். உழைத்து மேலே வருபவர்கள் தன்னையே நம்புவார்கள்; அதிர்ஷ்டத்தில் வருபவர்கள் தொடர்ந்து அதிர்ஷ்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றார். மேலும், 3 முறை அதிர்ஷ்டத்தில் கிடைத்த முதல்வர் பதவி மீண்டும் கிடைக்காதா என OPS ஏங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
News January 29, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $431.92 (இந்திய மதிப்பில் ₹39,754) உயர்ந்து $5,518.44-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $11.94 அதிகரித்து $118.1 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது.
News January 29, 2026
அஜித் பவார் இடத்தை பிடிக்கப் போவது யார்?

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனவர் அஜித் பவார். எனினும் மீண்டும் சரத் பவாருடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் எழுந்தன. இந்நிலையில் எதிர்பாரா விதமாக அஜித் பவாரின் திடீர் மரணம் அக்கட்சியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவி ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை வலது பக்கம் Swipe செய்து பாருங்க..


