News December 31, 2025
பொங்கல் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்க: அன்புமணி

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தோ, அதில் கரும்பு இடம்பெறுமா என்பது குறித்தோ இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என அன்புமணி விமர்சித்துள்ளார். பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் உள்ள குளறுபடிகளால், விவசாயிகளின் வலி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்வதோடு, தொகுப்பில் வழங்கும் கரும்புகளின் எண்ணிக்கையை 2-ஆக அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 15, 2026
திருப்பத்தூர்: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

திருப்பத்தூர் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 15, 2026
கற்றல் திறன்.. பிப்.18 ரெடியா இருங்க மாணவர்களே!

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் சோதனைக்காக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு, கணித அடிப்படை திறன்கள் மதிப்பிடப்பட உள்ளன. பிப்.18 (புதன்கிழமை) மற்றும் பிப்.20-ல் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மதிப்பீடு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 15, 2026
பாஜகவின் சதியை CM முறியடித்தார்: உதயநிதி

தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடலாம் என்று பாஜகவும், அதன் அடிமை கூட்டங்களும் முயற்சி செய்ததாக DCM உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அதனை CM ஸ்டாலின் முறியடித்துள்ளார் என்றார். மேலும், ஜனவரியில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000, பொங்கல் பரிசு ₹3,000 & தற்போது ₹3,000 + ₹2,000 என 2 மாதங்களில் மொத்தம் ₹9,000 மகளிரிடம் CM கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.


