News January 8, 2025
பொங்கல் கரும்பை ஆய்வு செய்த ஆட்சியர்
தை திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட இருப்பதால், அரசர் குளம் பகுதியில் அரசால் வாங்கப்பட்ட செங்கரும்பு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் அருணா இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News January 9, 2025
4,92,891 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு- ஆட்சியர் தகவல்
புதுகை மாவட்டத்தில் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் 4,91,944 அரிசி அட்டை தாரர்களுக்கும், 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News January 8, 2025
மழையூர் : டூவீலர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி
கறம்பக்குடி அருகே கம்மங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). விவசாயி. இவர் சொந்தவேலை காரணமாக மழையூர் தீத்தாணிப்பட்டிக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் மோதிய விபத்தில் ராஜேந்திரன் அதே இடத்தில் பலியானார். மற்றொரு டூவீலரில் வந்தவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மழையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
News January 8, 2025
தாட்கோ மூலம் பயிற்சி பெற அழைப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தொழில்நுட்ப பயிற்சியாளர், பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். www.tahodco மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.