News January 14, 2026
பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

போகி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே பள்ளிகளுக்கு இன்று (ஜன.14) கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். எனவே, வெளியூரில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லத் தயாராகிவிட்டனர்.
Similar News
News February 12, 2026
இறந்துபோன மனைவியை காட்டிக்கொடுத்த ஆதார்

இறந்ததாக கருதப்பட்ட பெண் ஒருவர், ஆதார் அட்டையை புதுப்பிக்கும்போது கிடைத்த OTP-ஆல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உ.பி.,யை சேர்ந்த சந்தீப் காணாமல் போன தனது மனைவி பிரியங்கா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்திருந்தார். ஆனால் வீட்டை விட்டு ஓடிய பிரியங்கா, ராஜஸ்தானில் வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஆதார் அப்டேட்டுக்கான OTP சந்தீப்பின் மொபைலுக்கு சென்று அவரை காட்டிக்கொடுத்துள்ளது.
News February 12, 2026
நகைக் கடன்.. இந்த தகவலை நோட் பண்ணுங்க

தற்போதைய நிலவரப்படி அவ்வப்போது தங்கம் விலை குறைந்தாலும், சவரன் ₹1 லட்சத்துக்கு கீழ் செல்லவில்லை. இதனால் வங்கியில் நகைக்கடன் பெறுவோர் அதிகரித்துள்ளதாக RBI அறிக்கை தெரிவிக்கிறது. அதேநேரம், EMI முறையில் திருப்பிச் செலுத்தும்போது நிலுவையிலுள்ள கடன் தொகைக்கான வட்டி மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் எளிய வட்டி முறையில் செலுத்தும்போது அசல் தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
News February 12, 2026
தமிழகத்திற்கு திமுகவால் அவப்பெயர்: அருண்ராஜ்

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்பதை முடிவு செய்து, அதன் பட்டியலை ஒரு வாரத்திற்குள் பரிந்துரைக்குமாறு திமுக அரசுக்கு SC உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். டிஜிபி நியமனம் குறித்து தவெக கேட்ட போதெல்லாம் CM கண்டும் காணாமல் இருந்தார் என்றும், ஒரு டிஜிபியைக் கூட முறையாக நியமனம் செய்ய முடியாத மாநிலம் என TN-க்கு திமுக அவப்பெயரை தேடி தந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


